சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் சில விடியோக்கள் சில சமயங்களில் விவாதப் பொருளாகவும் மாறுகின்றன. இப்போது, இதுபோன்ற மற்றொரு திருட்டு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு திருடன் ஒரு நபரின் தொலைபேசியை அவர் பக்கத்திலேயே நின்றுகொண்டு எவ்வளவு புத்திசாலித்தனமாகத் திருடுகிறான் என்பதைக் காணலாம். பையை வைத்து மறைத்துக்கொண்டு செல்போனை திருடிய திருடன் தனது சாமர்த்தியத்தைக் காட்டிவிட்டு அமைதியாக நடந்து செல்கிறான்.
https://x.com/i/status/1990412360998109542
அவன் சென்ற பிறகுதான், அவன் தன் பாக்கெட்டிலிருந்து தன் போன் காணாமல் போனதை உணர்கிறார் அந்த நபர். அவர் உடனடியாக திருடனைப் பிடிக்க முயற்சிக்கிறார், ஆனால் திருடன் ஏற்கனவே சென்றுவிட்டான். சட்டைப்பையில் இருந்து திருடன் போனைத் திருடி 30 வினாடிகளுக்குள் தப்பித்து சென்றுவிட்டார். இந்த அதிர்ச்சியூட்டும் காணொளி, @nandantwts என்ற முகவரியால் Instagram இல் பகிரப்பட்டுள்ளது.
