அரசியலில் பரபரப்பு..! விஜய் காங்கிரஸில் சேர முயற்சி… ஜோதிமணி வெளியிட்ட பரபரப்பு தகவல்..!!!

By Soundarya on கார்த்திகை 18, 2025

Spread the love

2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி அரசியல் கட்சியினர் கட்சியினை பலப்படுத்தி ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.  இம்முறை விஜய் அரசியலில் இறங்கியுள்ளதால் பெரும் பரபரப்பாகவே செல்கிறது. இப்படியான சூழலில் விஜய் 2010 ஆம் வருடம் ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸில் இணைய முன்வந்ததாக ஜோதி மணி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு விஜய் புதியவர் அல்ல.

ஒரு சில காரணங்களால் விஜய் காங்கிரஸ்  கட்சியில் இணைய முடியாமல் போனதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக, காங்கிரஸ் கூட்டணி உருவாகுமா? என அரசியல் வட்டாரத்தில் யூகங்கள் எழுந்த நிலையில், ஜோதிமணி இதனை தெரிவித்துள்ளார். மேலும், நாங்கள் இதுவரை திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.