கோவை மற்றும் மதுரை மாநகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை நிராகரித்து மத்திய அரசு அதிர்ச்சி கொடுத்துள்ளது. 20 லட்சம் மக்கள் தொகை இல்லாத நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை அனுமதிக்க முடியாது என்று கூறி தமிழக அரசின் திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. மேலும் கோவையில் 15.84 லட்சம், மதுரையில் 15 லட்சம் மக்கள் தொகை மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
