அண்டை மாநிலமான ஆந்திராவின் காக்கிநாடா மற்றும் விஜயவாடாவில் 31 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடி மருந்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அல்லூரி சீதா ராமராஜு மாவட்டத்தில் இன்று மாவோயிஸ்டுகளின் முக்கிய தளபதி உள்ளிட்ட ஆறு பேர் என்கவுண்டர் செய்யப்பட்டனர். மேலும் தேடுதல் வேட்டை தீவிர படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகின்றது.
