திடீர் திருப்பம்… முக்கிய அமைச்சரை ஓரம் கட்டும் திமுக தலைமை… உதயநிதி போட்ட பிளானில் ஆட்டம் காணும் மூத்த அமைச்சர்கள்…!

By Nanthini on கார்த்திகை 18, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க நாளுக்கு நாள் தேர்தல் காலமும் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக திமுக மீண்டும் ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. அதே சமயம் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் திமுகவில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளின் பொறுப்புகளையும் அவ்வபோது மாற்றம் செய்து வருகிறது.

இந்நிலையில் கட்சிக்கு இளம் ரத்தம் பாய்ச்சும் உதயநிதியின் பிளானை திமுக தலைமை சீரியஸாக எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வயதான மற்றும் சரியாக செயல்படாத மூத்த அமைச்சர்களை ஓரம் கட்ட திட்டம் தீட்டியுள்ளது. அதன்படி வருகின்ற தேர்தலில் அமைச்சர் KKSSR-க்கு சீட் வழங்கப்படாது என பேசப்படுகிறது. இதைத் தெரிந்து தான் பேரிடர் மேலாண்மை அமைச்சராக இருக்கும் அவர் சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது ஆக்டிவாக இல்லை என கூறப்படுகிறது.