சரியும் அதிமுகவின் கோட்டை… செந்தில் பாலாஜிக்கு ஸ்டாலின் போட்ட ஆர்டர்… சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்…!

By Nanthini on கார்த்திகை 18, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களமும் நாளுக்கு நாள் சூடு பிடித்துக் கொண்டே வருகிறது. என்னதான் கூட்டணி பலமாக இருந்தாலும் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் அனைத்து கட்சியினரும் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியை தீவிர படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் திமுகவில் இணைந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் வாகை சூட வேண்டுமென்று திமுக நிர்வாகிகள் முன்னிலையில் மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சூலூர், கிணத்துக்கடவு மற்றும் வால்பாறை தொகுதி திமுக நிர்வாகிகளுடன் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் ஒன் டூ ஒன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அதிமுக கோட்டையாக உள்ள கோவையில் திமுக தீவிரமாக களப்பணியாற்ற வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார்.