தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 5 மாதங்கள் மட்டுமே இருப்பதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயின் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக விஜய் களத்தில் இறங்கிய பிறகு அவருக்கு பல கட்சிகளும் தொடர்ந்து அழைப்பு விடுத்து வரும் நிலையில் விஜய் இதுவரை கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடாமல் உள்ளார். அதேசமயம் கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜய் கட்சியில் இருந்து விலகி பலரும் மாற்று கட்சிகளில் இணைந்து வருகிறார்கள். ஆனால் நடிகர் விஜய் தனது கட்சியை பலப்படுத்த பல முயற்சிகளை கையில் எடுத்துள்ளார்.
இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணி சிவானந்த சாலையில் SIR பணிகளுக்கு எதிராக நேற்று தமிழக வெற்றி கழகம் போராட்டம் நடத்தியது. அப்போது பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் மாவட்ட செயலாளர் அப்புனு உள்ளிட்ட 2500 பேர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
