பாமகவில் அடுத்த பரபரப்பு… 2026 தேர்தல் கூட்டணி… சற்றுமுன் ராமதாஸ் வெளியிட்ட அறிவிப்பு…!

By Nanthini on கார்த்திகை 17, 2025

Spread the love

தமிழகத்தில் இன்னும் ஆறு மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றன. ஆனால் பாமகவில் மட்டும் தந்தை மகன் நடுவில் நிலவும் பிரச்சனை தீவிரமாகி கொண்டே செல்கிறது. இதனால் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கினார். ஆனால் தேர்தல் ஆணையம் கட்சியின் தலைவர் மற்றும் சின்னத்திற்கு உரியவர் அன்புமணி தான் என்று தெரிவித்துவிட்டது.

இதனை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்று ராமதாஸ் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி நீக்குவதும் அன்புமணியின் ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இதனால் உண்மையான பாமக யார் என்பதே தற்போது கேள்விக்குறியாக தான் உள்ளது. அதேசமயம் பாமக இரண்டாக இருப்பதால் அது யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.

   

இந்நிலையில் பாமக கூட்டணி குறித்து கட்சியின் நிறுவனர் ராமதாஸ் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், வருகின்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான பாமக கூட்டணி குறித்த டிசம்பர் மாதம் முடிவெடுக்கப்படும். பாமக பங்கேற்கும் கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும். தேர்தலின் போது வாக்குக்கு பணம் வாங்க மாட்டோம் என உறுதியாக இருந்தால்தான் தமிழகத்தில் நல்லாட்சி அமையும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.