நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மரங்களின் மாநாடு, மாடுகளின் மாநாடு என அடுத்தடுத்து மாநாடுகளை நடத்தி வருகிறார். இந்நிலையில் நாம் தமிழர் எடுத்து வைக்கும் அரசியலின் அருகே வர இங்குள்ளவர்களுக்கு அரை நுாற்றாண்டு ஆகும் தெரிவித்துள்ளார் சீமான் . தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த தண்ணீர் மாநாட்டில் பேசிய அவர், “நாங்கள் முன்னெடுக்கும் நிகழ்வுகளை பைத்தியம் என்பது போல, இங்குள்ள பல பைத்தியங்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
சீமான் மரத்தோடு பேசுகிறார். அதற்கு என்ன ஓட்டு இருக்கிறதா? என்றெல்லாம் சொல்கிறார்கள். மரத்திற்கு ஓட்டு அல்ல. அதற்கு உயிர் இருக்கிறது. தண்ணீரிடம் வாக்கு இல்லை. வாழ்க்கை இருக்கிறது” என்றார்.
