மகாலட்சுமி ராஜயோகம்…! 3 ராசிகாரர்களுக்கு ஆரோக்கியம்,செல்வம் மேம்படும்…. உங்க ராசி இருக்கான்னு பாருங்க….!!

By Devi Ramu on கார்த்திகை 17, 2025

Spread the love

ஜோதிடத்தின்படி, செவ்வாய் பகவான் தற்போது தனது சொந்த ராசியான விருச்சிகத்தில் சஞ்சரித்து வருகிறார். வரும் நவம்பர் 20, 2025 அன்று சந்திரனும் விருச்சிக ராசியில் இணைய உள்ளார். செவ்வாய் மற்றும் சந்திரன் விருச்சிக ராசியில் சேர்வதால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகம் காரணமாக மூன்று ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்களும், நிதி ரீதியான லாபங்களும், மன அமைதியும் கிடைக்கும்.

கடகம்:

   

கடக ராசிக்காரர்களுக்கு, இந்த யோகம் மிகவும் மங்களகரமானதாக அமையும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி, நிதி ஆதாயத்திற்கான வழிகள் திறக்கப்படுதல், ஆரோக்கியம் மற்றும் குடும்ப உறவுகளில் முன்னேற்றம், நீண்ட நாள் ஆசைகள் மற்றும் திருமணத் தடைகள் நீங்குதல் போன்ற பலன்கள் கிடைக்கும்.

   

விருச்சிகம்:

 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு, நிலுவையில் உள்ள பணிகள் நிறைவடைவதுடன், திடீர் பண வரவு நிதி நிலையை மேம்படுத்தும். தன்னம்பிக்கை அதிகரிக்கும், ஆரோக்கியம் சீராகும் மற்றும் மாணவர்களுக்குச் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு, வீட்டில் இருந்து வந்த நிதிச் சிக்கல்கள் தீருவதுடன், கடன் பிரச்சினைகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.