டெல்லியின் செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தார்கள். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் ஜெய்ஷ்-இ- முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கும் சில மருத்துவர்களுக்கும் தொடர்பு இருந்தது என்ஐஏ கண்டறிந்துள்ளது. முன்னதாக இந்த குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட காரை ஓட்டி வந்தது காஷ்மீரை சேர்ந்த மருத்துவர் உமர் நபி என்பது தெரிய வந்தது.
தற்கொலைப்படை தாக்குதல் முறையில் நடந்துள்ள இந்த குண்டு வெடிப்பில் மருத்துவர் உமர் நபியும் உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து பல்வேறு குழப்பங்கள் எழுந்து நிலையில் இது தற்கொலை படை தாக்குதல் என்பதை என்ஐஏ உறுதி செய்திருக்கிறது. இந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு உதவியாக இருந்த காஷ்மீரை சேர்ந்த அமீர் ரஷீத் அலியை டெல்லியில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். இவர் டெல்லிக்கு வந்திருந்ததும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
