அடச்சீ, நீ எல்லாம் ஒரு தகப்பனா?… பெற்ற மகளுக்கு குழந்தை கொடுத்த தந்தை… பிரசவம் முடியும் வரை உண்மையை மறைத்த சிறுமி… இறுதியில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!

By Nanthini on கார்த்திகை 17, 2025

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதி அருகே தேங்காய் வியாபாரி தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். இந்த வியாபாரி எந்த ஒரு தகப்பனும் செய்யக்கூடாத ஒரு கீழ்தரமான வேலையை செய்துள்ளார். இவருடைய 17 வயது மகள் அந்த பகுதியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகின்றார். இந்த சிறுமிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தீரிட பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு குழந்தை பிறந்து அந்த குழந்தையை அம்மா தொட்டில் குழந்தை முகாமில் சேர்த்து விட்டனர். உடனே இது குறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்த போலீசார் சிகிச்சையில் இருந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அந்த சமயத்தில் சிறுமியுடன் தந்தை மட்டுமே உடன் இருந்துள்ளார்.

விசாரணையின் போது சிறுமி தான் காதலித்த ஆண் நபர் தான் காரணம் என்றும் எந்த சூழலிலும் அந்த பையனின் பெயரை சொல்ல மாட்டேன் என்றும் கூறியுள்ளார். தந்தையிடம் விசாரணை நடத்திய போது அவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் மாணவிக்கு பலகட்ட உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்ட பிறகு அவர் சொன்ன தகவல்கள் திடுக்கிட வைத்தது. அதாவது அந்தத் தேங்காய் வியாபாரி தான் தனது சொந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

   

சிறுமி கர்ப்பம் அடைந்த விஷயம் மனைவிக்கும் மகனுக்கும் தெரியக்கூடாது என்பதற்காக இவரே திருவனந்தபுரம் அழைத்து வந்து பிரசவத்தையும் முடித்துள்ளார். மனைவியும் இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் பெரிய பிரச்சனையாகிவிடும் என்று பயந்து தந்தையின் குற்றத்தை மறைத்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீஸ் சார் அந்த வியாபாரியை போக்சோ உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். பெற்ற தந்தையே இப்படி ஒரு கொடூர செயலை செய்தது அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.