பொதுவாகவே நாம் அவசர தேவை என்றால் நம்மிடம் இருக்கும் நகைகளை வங்கிகளில் அடகு வைத்து பணம் பெறுவது வழக்கம். நாம் அடகு வைக்கக்கூடிய நகைக்கி பொருத்தவாறு வங்கிகளில் இருந்து நமக்கு கடன் வழங்கப்படும். அதற்கு வட்டி செலுத்தி வரும் பட்சத்தில் வருடத்திற்கு ஒருமுறை அதனை மீண்டும் திருப்பி வைக்க வேண்டும். ஒருவேளை அப்படி முயலாவிட்டால் நகைகள் ஏலத்தில் விடப்படும். தற்போது நகைக்கடன் விதிகளில் தொடர்ந்து பல மாற்றங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது.
அதன்படி அடகு கடை வணிகர்கள், தனியார் நிதி நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களின் நகைகளுக்கு அதிக வட்டி அதாவது 30 சதவீதம் வரை பெற்றுக்கொண்டு அதே நகைகளை வங்கிகளில் குறைந்த வட்டிக்கு (8 முதல் 17 சதவீதம்) கடன் பெற்று பயனடைந்து வந்தனர். மறு அழகு என அழைக்கப்படும் இந்த நடைமுறையை ரிசர்வ் வங்கி நிறுத்தியுள்ளது. நகைகளின் உண்மையான உரிமையாளர்களை அறிந்து நகை கடன் வழங்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே மக்கள் வங்கிகளை நாடுவதே சிறந்தது.
