திடீர் திருப்பம்… 20 தொகுதிகளை மட்டும் குறி வைக்கும் DMK, ADMK… பரபரக்கும் தமிழக அரசியல் களம்…!

By Nanthini on கார்த்திகை 16, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களமும் நாளுக்கு நாள் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. ஒரு பக்கம் தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக இந்த முறையும் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. மறுபக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் பல வியூகங்களை வகுத்து வருகிறது. இவர்களுக்கு நடுவே விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் அவரையும் கூட்டணியில் இணைக்கும் முயற்சி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் 2021 தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த தொகுதிகளில் அதிமுக மற்றும் திமுக கவனம் செலுத்துகிறது. அதன்படி தென்காசி, மொடக்குறிச்சி மற்றும் தீநகர் உள்ளிட்ட 10 தொகுதிகளில் அதிமுக மற்றும் திமுக இடையே வெறும் ஆயிரம் தான் வாக்கு வித்தியாசம். அதேபோல தாராபுரம், கோவை தெற்கு உள்ளிட்ட பத்து தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் 2000ற்குள் இருந்தது. இதனால் இந்த 20 தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று இரண்டு கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.