உங்க ஜீன்ஸ் பேண்டில் கறை இருக்கா…? ஒரே நிமிஷத்தில் சுத்தம் பண்ணலாம்…. இதை ட்ரை பண்ணி பாருங்க…!!

By Devi Ramu on கார்த்திகை 16, 2025

Spread the love

ஜீன்ஸ் துணிகளைத் துவைப்பது சவாலான காரியம். அதிலும் ரத்தக் கறை, மஞ்சள் அல்லது எண்ணெய் போன்ற பிடிவாதமான கறைகள் படிந்தால், அதை அகற்றுவது மிகவும் கடினம். ரத்தக்கறை ஏற்பட்டால், உடனே உப்பு மற்றும் சோடாவை கலந்து தேய்த்தால் கறை நீங்கிவிடும். மஞ்சள் மற்றும் மசாலா கறைகளுக்கு, பேக்கிங் சோடாவுடன் வினிகரைக் குழைத்துத் தயாரிக்கப்பட்ட கெட்டியான பேஸ்ட்டைத் தடவி, அரை மணி நேரம் ஊறவைத்து, பின் குளிர்ந்த நீரில் அலசலாம்.

லிப்ஸ்டிக் அல்லது க்ரீம் போன்ற மேக்கப் கறைகளை நீக்க, ஷேவிங் க்ரீமைப் பயன்படுத்தித் தேய்த்துச் சுத்தம் செய்யலாம். மேலும், எண்ணெய் கறைகளுக்கு, வினிகர் மற்றும் பேக்கிங் சோடா கலந்த நீரில் 20 நிமிடங்கள் ஊறவைத்து அலசினால் கறைகள் மறைந்து போகும். ஜீன்ஸின் நிறம் மங்காமல் நீண்ட நாள் நீடித்திருக்க, எப்போதும் அதைக் குளிர்ந்த நீரில் மட்டுமே துவைக்க வேண்டும்.

   

சூடான நீரைப் பயன்படுத்தக் கூடாது. துவைக்கும்போது ஜீன்ஸை உட்புறமாகத் திருப்பிப் போட்டுத் துவைப்பது நல்லது. அடிக்கடி துவைப்பதைத் தவிர்த்து, வியர்வை நாற்றம் நீங்க அவ்வப்போது வெளியில் உலர வைப்பது சிறந்த பராமரிப்பாகும். இந்தக் குறிப்புகளைப் பின்பற்றினால், உங்கள் ஜீன்ஸ் அழுக்கின்றி, புதியது போலவே நீண்ட காலம் இருக்கும்.