திமுக கூட்டணியில் தமிழ் புலிகள் கட்சி இணைவதாக அந்த கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “தமிழ்நாட்டை பாதுகாப்பதற்காக திமுகவுடன் கைகோர்ப்பதாகவும், 2026 தேர்தலில் ஐந்து தொகுதிகளுக்கு மேல் கேட்போம் என்றும் கூறியுள்ளார். மேலும், தமிழ் புலிகள் கட்சி சார்பில் ஜனவரி 3-ம் தேதி ஈரோட்டில் நடக்கவிருக்கும் ‘வெல்லும் தமிழ்நாடு’ மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
