“ஐயோ, என்கிட்ட அவ்வளவு பணம் கிடையாது”… திடீரென ஜகா வாங்கிய திமுக அமைச்சர் நேரு… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

By Nanthini on கார்த்திகை 16, 2025

Spread the love

உலகப் புகழ்பெற்ற தலங்களில் ஒன்றுதான் திருப்பதி ஏழுமலையான் கோவில். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வதால் கோவிலின் அன்னதான பிரச்சாரம் மிகவும் முக்கிய சேவையாக இருந்து வருகின்றது. இந்த அன்னதான சேவையின் ஒரு நாள் செலவு மட்டுமே 44 லட்சம் என்று தேவஸ்தான நிர்வாகம் கூறுகிறது. அன்னதானம் வழங்க விரும்பும் பக்தர்களும் தங்களுடைய பெயரில் ஒரு நாள் முழு செலவான 44 லட்சத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டும். அந்த நன்கொடையாளரின் பெயர் அன்றைய தினம் அன்னதான அரங்கில் உள்ள டிஜிட்டல் பலகையில் வெளியிடப்படும். இந்த முறையை பின்பற்றி தமிழக நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் மற்றும் திமுகவின் மூத்த தலைவர் கே என் நேரு திருப்பதி கோவிலில் அன்னதானம் வழங்கியதாக தகவல் வெளியானது.

ஆனால் இந்த செய்தி வெளியாகியதும் சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் கேள்விகள் எழுந்தது. திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையான கடவுள் மறுப்பு தத்துவத்தை திமுகவின் மூத்த தலைவர் ஏழை மக்களை உதவுவதற்கு பதில் ஏற்கனவே செல்வ செழிப்பாக இருக்கும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஏன் இத்தனை தொகையை வழங்கினார் என்று விமர்சனங்கள் எழுந்தது. இதனிடையே அமைச்சருக்கே என் நேருவின் பெயர் திருப்பதி அன்னதான அரங்கின் டிஜிட்டல் திரையரங்கில் தெரிவிக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது. இதனைத் தொடர்ந்து அவரை குறிவைத்து மேலும் பல அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

   

சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்கள் இதுபற்றி கேட்டபோது நான் பணம் கொடுக்க கூடாதா, அப்படி கொடுத்திருந்தால் விமர்சனம் செய்யட்டும், எல்லோரும் என்னைப் பற்றி நல்லவன் என்று சொல்ல மாட்டார்கள் என்று உணர்ச்சி பொங்க பதில் அளித்தார். மீண்டும் இதே விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பிய போது நான் திருப்பதி கோவிலுக்கு நன்கொடை கொடுக்கவில்லை. எனக்கு 44 லட்சம் கொடுக்கத்தக்க தொகை இல்லை. அது என் குடும்பத்தினர் என் பெயரில் செய்த நன்கொடை. எனக்குத் தெரிந்திருந்தால் நான் அதனை நிறுத்தி இருப்பேன் என்று அவர் கூறியுள்ளார். அவருடைய இந்த புதிய விளக்கம் முன்பு அளித்த பதிலை முரண்படுவதாக இருப்பதால் இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.