பீகாரில் சமீபத்தில் நடந்து முடிந்த 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 202 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக சார்பில் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் தொகுதியில் போட்டியிட்ட பிரபல போஜ்புரி நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் வெற்றி பெற்று கவனம் ஈர்த்துள்ளார்.
25 வயதே ஆன இவர், பீகாரின் இளம் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) என்ற சிறப்பைப் பெற்றுள்ளார். கடந்த மாதம் பாஜகவில் இணைந்த மறுநாளே இவருக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், அரசியலுக்கு ஒரே மாதத்தில் இவர் எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
New Bihar BJP MLA.. Youngest.. Singing #Viswasam song 👌 https://t.co/chYJYNGLbH
— Ramesh Bala (@rameshlaus) November 15, 2025
மைதிலி தாக்கூர் 84,915 வாக்குகள் பெற்று, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தளத்தின் வினோத் மிஸ்ராவை 11,730 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். இவர், குழந்தைகள் பாடும் ஒரு ரியாலிட்டி ஷோவின் மூலம் சிறு வயதிலேயே மக்கள் மத்தியில் பிரபலமானவர். அரசியல் வெற்றிக்குப் பிறகு, எம்.எல்.ஏ. மைதிலி தாக்கூர் தமிழில் பாடிய “கண்ணான கண்ணே” என்ற பாடல் தற்போது இணையதளத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
