தமிழகத்தில் தள்ளுவண்டியில் உணவு விற்பனை செய்பவர்கள் FSSAI உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தள்ளுவண்டி கடை வைத்திருப்பவர்கள் இணையதளம் மூலமாகவோ அல்லது இ-சேவை மையம் மூலமாகவோ இலவசமாக இந்த உரிமத்தை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. FSSAI உரிமம் இல்லாத கடைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே உடனடியாக தள்ளுவண்டி கடை உரிமையாளர்கள் தங்களுடைய கடைக்கான உரிமத்தை பெற வலியுறுத்தப்படுகிறது.
