பிள்ளைகளின் வருங்கால நிதி பாதுகாப்பு என்பது ஒவ்வொரு பெற்றோரின் முதன்மையான விருப்பம். கல்வி முதல் பொருளாதார வளர்ச்சி வரை பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர், பல்வேறு இடங்களில் பணத்தை போடுகின்றனர். சரியான திட்டத்தை தேர்வு செய்வது குழந்தையின் எதிர்காலத்தை பெரிதும் வலுப்படுத்தும். அரசின் சுகன்யா சம்ரித்தி யோஜனா பெண் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டது.
பெற்றோர் கணக்கு தொடங்கலாம். 10 வயது வரை உள்ள சிறுமிகளுக்கு, ரூ.250 தொடங்கி முதலீடு செய்தால் 21 வயதில் 8.2% வட்டியுடன் சராசரி ரூ.50 லட்சம் வரை கிடைக்கும். சில வங்கிகள் குழந்தைகளுக்கு தனி திட்டம் வைத்துள்ளன. திருமணம், உயர்கல்விக்கு உதவும். உதாரணமாக, ரூ.1 லட்சம் போட்டால் 18 மாதத்தில் 7.10% வட்டியுடன் ரூ.1,10,994 கிடைக்கலாம், விகிதம் மாறுபடும்.
NPS வட்சல்யா திட்டம் நீண்டகால சேமிப்புக்கு ஏற்றது, குழந்தை பெயரில் ஓய்வூதிய கணக்கு தொடங்கலாம். 18 வயதில் தானாக வழக்கமான NPS ஆக மாறும், ஆண்டுக்கு குறைந்தது ரூ.1,000, உச்சம் இல்லை. வட்டி 9.5% முதல் 10% வரை, சிறுவயதில் இருந்தே வலிமையான ஓய்வூதிய நிதி உருவாக்க உதவும். இவை தகவல் மட்டுமே.
