தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஏராளமான பெண்கள் பயனடைந்து வரும் நிலையில் சில குடும்ப தலைவிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இதனால் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கும் விதமாக கடந்த மூன்று மாதங்களாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வந்தது. இந்த முகாம் மூலமாக மீண்டும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன் பெறுவதற்கு பலரும் புதிதாக விண்ணப்பித்தனர்.
இதுவரை உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக சுமார் 28 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் மகளிர் உரிமை தொகைக்காக விண்ணப்பித்துள்ளனர். இன்றுடன் மகளை உரிமைத்தொகை முகாம் நிறைவடைந்துவிட்டது. தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த முகாம்களில் விண்ணப்பிக்க வாய்ப்பு முடிந்து விட்டதால் இனி நேரடியாக விண்ணப்பிக்க முடியாது. இனி தகுதியான பெண்கள் அவரவர் பகுதிகளில் நடக்கும் குறைதீர் முகாம்களில் மனு அளிக்கலாம். அதிகாரிகள் பரிசீலித்து வாய்ப்பளித்தால் மட்டுமே ஆயிரம் ரூபாய் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
