தனுசு ராசியில் செவ்வாய் பெயர்ச்சி…! அதிர்ஷ்டம், செல்வத்தை பெறப்போகும் 3 ராசிக்கார்கள்…. உங்க ராசி இருக்கான்னு பாருங்க…!!

By Devi Ramu on கார்த்திகை 14, 2025

Spread the love

வேத ஜோதிடத்தில் செவ்வாய் கிரகம் தைரியம், வீரம், செல்வம், கோபத்தைக் குறிக்கும். டிசம்பரில் செவ்வாய் தனுசு ராசிக்கு மாறுவதால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் செல்வ வளர்ச்சியும் கிடைக்கும்.

மேஷம்:

   

மேஷ ராசிக்கு செவ்வாய் 9ஆம் வீட்டில் வருவதால் அதிர்ஷ்டம் பலமாகும். மத நிகழ்ச்சிகள், உள்நாடு வெளிநாடு பயணங்கள், வியாபார லாபம், வேலை உயர்வு, குடும்ப மகிழ்ச்சி வரும். புதிய திட்டங்களில் முதலீடு செய்யலாம். வெளிநாடு படிப்பு விருப்பம் நிறைவேறும்.

   

விருச்சிகம்:

 

விருச்சிக ராசியில் செவ்வாய் உச்சம் பெறுவதால் தைரியமும் உற்சாகமும் பெருகும். புதிய திறமைகள் கற்கலாம். உடல் நலத்தை கவனித்தால் ஆற்றல் அதிகரிக்கும். சமூக தொடர்புகள் வலுப்பெற்று புதிய வாய்ப்புகள் வரும். கூட்டு வேலைகளில் லாபம் கிடைக்கும்.

மீனம்:

மீன ராசிக்கு செவ்வாய் 10ஆம் வீட்டில் செல்வதால் வேலை தேடுபவர்களுக்கு வாய்ப்பு வரும். மேலதிகாரிகள் ஆதரவு, பழைய திட்டங்களில் வெற்றி, உறவுகளில் ஒற்றுமை உண்டாகும். தொழிலதிபர்களுக்கு நிதி லாபம், ரியல் எஸ்டேட், மருத்துவத் துறையினருக்கு முன்னேற்றம் கிடைக்கும்.