சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஒரு நபர் புலி வேடம் அணிந்துகொண்டு, காட்டுக்குள், கொடூரமான புலிகளின்முன்பு தைரியமாக நடந்து செல்கிறான். ஆனால் இது மனிதன் தான் புலி அல்ல என்பதை தெரிந்துகொண்ட அந்த புலி அந்த நபரை துரத்துகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
“ don’t get involve in crypto, its too risky “
crypto guys : pic.twitter.com/N3OEoykl1w
— naiive (@naiivememe) November 11, 2025
இந்த ஆபத்தான ஸ்டண்ட் வீடியோவிற்கு சமூக ஊடக பயனர்கள் பலரும் எதிர்மறை கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். “வீடியோ உண்மையானதா, அந்த மனிதனுக்கு என்ன ஆனது? அவர் உயிர் பிழைத்தாரா இல்லையா?” என்றும், ஒரு பயனர், “சகோதரரே, இந்த வீடியோ AI-யால் உருவாக்கப்பட்டது என்று நினைக்கிறேன்” என்று கருத்து தெரிவித்தார். மற்றொருவர், “அந்த நபரின் தைரியத்தை நான் பாராட்ட வேண்டும், ஆனால் இது முட்டாள்தனத்தின் உச்சம்” என்றார்.
