செல்போன் கவரில் பணம் வைக்கிறீர்களா…? இனிமேல் அந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க…. மீறினால் மிகப்பெரும் ஆபத்து…!!

By Devi Ramu on கார்த்திகை 13, 2025

Spread the love

இப்போதைய உலகில் ஸ்மார்ட்போன் இல்லாமல் வாழ முடியாத அளவுக்கு அது நம் அன்றாடத்தில் இணைந்துவிட்டது. வேலை, வங்கி விவகாரங்கள், படிப்பு, பொழுதுபோக்கு என எல்லாவற்றுக்கும் இது இன்றியமையாததாகிவிட்டது. செல்போன் கவரில் பண நோட்டுகள், அடையாள சீட்டுகள் அல்லது வங்கி அட்டைகளை வைத்து எடுத்துச் செல்கின்றனர்.

இது சாதாரணமாகத் தெரிந்தாலும், மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். சமீபத்தில் போன்கள் வெடித்த செய்திகள் பல இடங்களில் வந்துள்ளன. பெரும்பாலும் அதிக சூடு அல்லது தவறான பயன்பாடு காரணமாகக் கூறினாலும், உறையில் பணம் வைப்பதும் ஒரு மறைமுக காரணம் என்பதை பலர் அறியவில்லை.

   

போனை நீண்ட நேரம் உபயோகித்தால் அல்லது அடிக்கடி மின்னேற்றம் செய்தால் அது சூடாகும். அப்போது உறையில் உள்ள ரூபாய் நோட்டுகளில் இருக்கும் சுண்ணாம்பு கலந்த பொருள், போனின் வெப்பத்துடன் வினைபுரிந்து வெடிப்பை உண்டாக்கும் வாய்ப்பை அதிகரிக்கும். கேம்கள் விளையாடும்போது அல்லது காணொளிகள் பார்க்கும்போது சூடு மிகுந்து காந்த அலைப்புலம் உருவாகும்.

   

உறையில் பணம் அல்லது அட்டைகள் இருந்தால் சூடு வெளியேற முடியாமல் தடுக்கப்பட்டு, மின்கலம் வீங்கி வெடிக்கும் அபாயம் ஏற்படும். இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். மேலும், வங்கி அல்லது கடனட்டைகளின் காந்த பட்டை போனின் அலைகளால் சேதமடைந்து செயலிழக்கும்.

 

பணத்தை பர்ஸ் அல்லது பாக்கெட்டில் வைப்பது சிறந்தது. அடையாள சீட்டுகள், வங்கி அட்டைகளை தனி உறையில் வைக்க வேண்டும். போன் கவரில் எதுவும் வைக்கக் கூடாது. சிறிய அலட்சியம் பெரிய விபத்துக்கு வழிவகுக்கும். போன் நம் வாழ்வின் பகுதி என்றாலும், அதை பத்திரமாக கையாள்வது நம் கடமை. வசதிக்காக ஆபத்தை அழைக்க வேண்டாம்.