வேலூர் திமுக எம்பி கதிர் ஆனந்தியின் ஆதரவாளர்களான பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் அவரது உறவினர் தாமோதரன் வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். காட்பாடி அடுத்த பள்ளிக்குப்பம் கிராமத்தில் தாமோதரனுக்கு சொந்தமான சிமெண்ட் கிடங்கியிலிருந்து 10.48 கோடி பணம் மற்றும் வாக்குச்சாவடி வாரியாக வாக்காளர்கள் விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் திமுகவை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
