திடீர் திருப்பம்… தவெக தலைமையில் கூட்டணி… சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!

By Nanthini on கார்த்திகை 13, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் நான்கு முனை போட்டியாக உள்ளது. அதாவது திமுக, அதிமுக, தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப்போட்டி நிலவி வருகிறது. இதில் தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக எப்படியும் தங்கள் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. மறுபக்கம் சீமான் யாருடனும் கூட்டணி வைக்காமல் தன்னந்தனி ஆளாக கட்சியை வழிநடத்தி வருகிறார். அதேசமயம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் அதிமுக ஆட்சியை நிலை நாட்டுவதற்கான வியூகங்களை வகுத்து வருகிறார். இவர்களுக்கு நடுவே விஜயும் களத்தில் இறங்கி உள்ளதால் விஜயை தங்கள் கூட்டணியில் இழுக்கும் முயற்சியில் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

ஆனால் முதல்வர் வேட்பாளர் விஜய் தான் தனித்து தான் போட்டி என சமீபத்தில் நடந்த தமிழக வெற்றி கழகம் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் தமிழகத்தில் நான்குமுனை போட்டி நிலவுவது உறுதியாகியுள்ளது.  இருந்தாலும் விஜயை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றன.

   

இதனிடையே பாஜக மற்றும் திமுகவை தவிர வேறு எந்த கட்சி வந்தாலும் அரவணைப்போம் என்று தமிழக வெற்றிக்கழகம் கொள்கை பரப்பு செயலாளர் அருள்ராஜ் தெரிவித்துள்ளார். நேற்று சென்னையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், கூட்டணி குறித்த முடிவை தலைவர் விஜய் எடுப்பார் என்றும், அவரது சுற்றுப்பயண அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். மக்களுடன் இருக்க வேண்டுமென்ற மன உறுதி விஜய்க்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.