ஐயோ இப்படியா உயிர் போகணும்?… பெயர் சூட்டும் விழாவில் நடந்த துயரம்… வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்ததில் 11 மாத குழந்தை பலி…!

By Nanthini on கார்த்திகை 12, 2025

Spread the love

தூத்துக்குடி அருகே குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவில் வீட்டின் மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்ததில் விழாவுக்கு வந்த எதிர் வீட்டை சேர்ந்த பெண்ணின் 11 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தையின் தாயார் ராதா மகேஸ்வரிக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவில் நடந்த இந்த துயர சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.