நாடு முழுவதும் தெரு நாய்களின் தொல்லை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ரேபிஸ் நோய் தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதன்படி நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நாய் கடித்து ரேபிஸ் பாதித்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு ஐயப்பன் (30) என்ற கட்டிடத் தொழிலாளியின் நாய் கடித்த நிலையில் காயத்தை சரியாக கவனிக்காமல் அப்படியே விட்டுள்ளார். இதனால் அவருடைய உடல்நிலை ஒரு கட்டத்தில் மோசமான நிலையில் நாகர்கோவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
