சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த பிகாம் படித்து வரும் இளம் பெண் ஒருவர் மோஜ் செயலி மூலமாக நண்பர்களோடு பழகி வந்துள்ளார். அதன்படி லிபின் ராஜ் (25) என்ற வாலிபருடன் இளம்பெண்ணுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் நட்பாக பழகிய வாலிபர் நாளடைவில் இளம்பெண்ணுக்கு காதல் வலை விரித்துள்ளார். அதில் இளம்பெண் மயங்கிய நிலையில் அவரோடு வீடியோ காலில் பேசி வந்தார். இதுபோன்ற வீடியோ காலில் பேசும்போது லிபின் ராஜ் இளம் பெண்ணை ஆபாசமாக புகைப்படங்கள் எடுத்துள்ளார்.
இதனிடையே கடந்த செப்டம்பர் மாதம் இளம்பெண்ணிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய அவர், உன்னை ஆபாசமாக புகைப்படங்கள் எடுத்து வைத்துள்ளேன். நான் சொல்வது போல கேட்காவிட்டால் அந்த புகைப்படங்களை எல்லாம் வெளியிட்டு விடுவேன் என்று கூறி மிரட்டி உள்ளார். இதற்கு பயந்து போன அந்த இளம் பெண் தயவு செய்து என் புகைப்படங்களை வெளியிட்டு விடாதே நீ சொல்வது போல நான் தொடர்ந்து நடந்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வாலிபர் நான் சொல்வது போல பெரிய மேடு லாட்ஜுக்கு வந்துவிடு, அங்கு இருவரும் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். அவர் மிரட்டியபடி அழைத்ததால் பயந்து போன இளம் பெண் அவர் கூறியது போல பெரிய மேட்டில் உள்ள லாட்ஜுக்கு சென்றார்.
அங்கு லிபின் ராஜ் இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த மாதமும் இதேபோல மிரட்டி அந்த லாட்ஜுக்கு வரவழைத்து இளம்பெண்ணை நாசம் செய்துள்ளார். மூன்றாவது முறையாக ஆபாசமாக எடுக்கப்பட்ட இளம் பெண்ணின் புகைப்படங்களை இன்ஸ்ட்டாவில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டல் விடுத்து இரண்டு முறையும் பெரிய மேடு லாட்ஜில் வைத்து லிவிங் ராஜ் அடிக்கடி உல்லாசமாக இருந்த நிலையில் மூன்றாவது முறையும் துணிச்சலாக இளம் பெண்ணை லாட்ஜுக்கு வரவழைத்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய அவர், நான் சொல்வது போல இந்த முறையும் வந்துவிட இல்லை என்றால் நடப்பதே வேறு, உன் புகைப்படங்களை நீ வராவிட்டால் உனது உறவினர்களுக்கு அனுப்பி விடுவேன் என்று கூறி மிரட்டி உள்ளார். அப்போது இளம் பெண் தனது பாட்டு இறந்து மூன்று நாட்கள் தான் ஆகிறது என்று கூறி லாட்ஜுக்கு வர முடியாது என கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் இளம் பெண்ணின் ஆபாச புகைப்படங்களை அவருடைய தாயாரின் செல்போனுக்கு அனுப்பியுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம் பெண்ணின் தாயார் இது பற்றி போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கன்னியாகுமரியை சேர்ந்த அந்த வாலிபரை கைது செய்தனர். ஆட்டோ டிரைவர் ஆன இவர் இதுபோன்று வேறு எந்த பெண்களிடம் ஆவது அத்துமீறி நடந்துள்ளாரா என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
