பெண்களே இனியாவது புரிஞ்சிக்கோங்க… “இதெல்லாம் நிஜ வாழ்க்கைக்கு செட் ஆகாது” சோஷியல் மீடியா டிரிக்கால் நடந்த விபரீதம்… சிரிக்க வைக்கும் வீடியோ வைரல்…!!

By Soundarya on கார்த்திகை 12, 2025

Spread the love

சமூக ஊடகங்கள்  வாழ்க்கையை எளிதாக்குவதற்கான ஏராளமான டிப்ஸ்கள்  ரீல்ஸ்களாக பதிவிடப்படுகிறது. பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் டிப்ஸ்களும் இதில் அடங்கும்.  ஒரு சாதாரண ஆடையை கூட அழகாகக் காட்டுவது போன்றவை இதில் அடங்கும். இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், இந்த டிப்ஸ்களில்  பல வீடியோக்களில் செய்வது போல் நிஜ வாழ்க்கையில் அதே முடிவுகளை வழங்குவதில்லை. சமீபத்திய வீடியோ அத்தகைய ஒரு  ரீல்ஸ் பற்றியது.

11 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், ஒரு பெண் தனது நெற்றியின் அருகே ஒரு முட்கரண்டியைப் பிடித்து, பின்னர் அதை ஜிக்-ஜாக் இயக்கத்தில் மேல்நோக்கி நகர்த்துகிறார். இது அவரது தலைமுடியை ஜிக்-ஜாக் முறையில் அழகாகப் பிரிக்கிறது. இதைப்பார்த்தமற்றொரு பெண் முயற்சிக்கும்போது, ​​கரண்டி அவரது தலைமுடியில் சிக்கிக் கொள்கிறது. அந்தப் பெண்ணின் முகபாவனையையும், கரண்டி அவரது தலைமுடியில் சிக்கியதையும் பார்த்து மக்கள் சிரிக்காமல் இருக்க முடியாது.