பின்னந்தலையில் ஒரே போடு… நள்ளிரவில் ஓட ஓட விரட்டி இளைஞர் கொடூர கொலை… தமிழகத்தில் மற்றொரு பயங்கரம்…!

By Nanthini on கார்த்திகை 12, 2025

Spread the love

பரமக்குடியில் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி முத்தாலம்மன் கோவில் படித்துறை பகுதியை சேர்ந்த பாக்கியம் என்பவருடைய மகன்தான் கார்த்தி (25). இவருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் பிளக்ஸ் போர்டு பிரின்டிங் கடையில் பணியாற்றி வருகின்றார். நேற்று இரவு பணியை முடித்துவிட்டு முத்தாலம்மன் கோவில் அருகே உள்ள மார்க்கெட் வீதியில் நண்பர்களுடன் என்று பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மூன்று பேர் கார்த்திக் உடன் தகராறு செய்தனர். உடனே கத்தியால் கார்த்தியை குத்த முற்பட்ட போது அவர் தப்பித்து ஓடினார். மூன்று பேரும் விரட்டி விரட்டி அவரை பின் தலையில் அறிவாளால் வெட்டியதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த கார்த்திக் உடலை பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கொடைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை செய்து வரும் நிலையில் தப்பிச்சென்ற மூன்று பேரையும் தொலைபேசி தேடி வருகிறார்கள்