தமிழகத்தில் ஆண்களுக்கும் மாதம்தோறும் அரசு ஆயிரம் ரூபாய் வழங்குவதாக கூறி குறிப்பிட்ட செயலியை டவுன்லோடு செய்ய சொல்லி செய்திகள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. தற்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் நிலையில் ஆண்களுக்கும் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக ஒரு செய்தி இணையத்தில் உலா வருகிறது.
ஆனால் இது முற்றிலும் வதந்தி என அரசின் TN Fact check மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ் புதல்வன் திட்டத்தில் அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாகவும் அரசு விளக்கம் அளித்துள்ளது.
