தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியலை அரசு நேற்று வெளியிட்டது. இதில் ஜனவரி 15 பொங்கல் பண்டிகை, ஜனவரி 16 திருவள்ளுவர் தினம், ஜனவரி 17 உழவர் திருநாள் ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல ஏதுவாக ஜனவரி 13 மற்றும் போகி பண்டிகையான ஜனவரி 14-ஆம் தேதியும் கூடுதல் விடுமுறை அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு பரிசீலனை செய்து விரைவில் அது தொடர்பான அறிவிப்பை வெளியாகும் என கூறப்படுகிறது. இதனால் பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் கூடுதல் விடுமுறை வரப்போகிறது.
