அடிக்கடி உல்லாசம்…! “ஹோட்டல் ஊழியரின் கழுத்தை அறுத்து…” காதலனுடன் சேர்ந்து மனைவி செய்த பயங்கரம்…. நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு…!!

By Devi Ramu on கார்த்திகை 12, 2025

Spread the love

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஜம்போதி கிராமத்தைச் சேர்ந்த 34 வயது சத்யராஜ் சென்னையில் தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்தார். 2022-ஆம் ஆண்டு  ஜம்போதி கிராமத்தைச் சேர்ந்த 27 வயது சசிகலாவைத் திருமணம் செய்தார். திருமணத்துக்குப் பின் மனைவியைப் பெற்றோரிடம் விட்டுவிட்டு சென்னை சென்றார். 15 நாட்களுக்கு ஒருமுறை ஊர் வந்து செல்வார்.

இந்த நிலையில் சத்யராஜ் வீட்டுக்கு எதிரில் வசித்த ஜானகிராமனுக்கும்(28) சசிகலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. கணவன் இல்லாத நேரங்களில் இருவரும் சந்தித்து வந்தனர். சத்யராஜ் இவர்களது உறவுக்கு இடையூறாக இருந்ததால் அவரை கொலை செய்ய திட்டமிட்டனர். சசிகலா அரசு வேலை கிடைத்ததாகக் கூறி சத்யராஜை சென்னையில் இருந்து வரவழைத்தார். கடந்த 2023-ஆம் ஆண்டு இரவு சசிகலா ஸ்கூட்டரில் சத்யராஜை மொடையூர் ஆற்றுப்பாலம் கீழ் அழைத்து சென்றதும் அங்கு மறைந்திருந்த ஜானகிராமன் சத்யராஜின் கழுத்தை கத்தியால் அறுத்தார். சசிகலா கை, கால்களைப் பிடித்துக் கொண்டார்.

   

பலத்த காயமடைந்த சத்யராஜை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பல நாள் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார். புகாரின் பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிந்து சசிகலா, ஜானகிராமனை கைது செய்தனர். திண்டிவனம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த  வழக்கு நடந்தது. நேற்று தீர்ப்பில் ஜானகிராமன், சசிகலாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி முகமது பாரூக் உத்தரவிட்டார். இருவரும் பலத்த பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட்டனர்.