சாப்பாட்டு அரிசியில் வண்டு, புழு இருக்கா….? வீட்டில் உள்ள இந்த பொருளை யூஸ் பண்ணி பாருங்க…. ஈஸி டிப்ஸ் இதோ…!!

By Devi Ramu on கார்த்திகை 11, 2025

Spread the love

அரிசி, பருப்பு, மாவில் சிறிய வண்டுகள், புழுக்கள் வருவது வழக்கம். மழை, குளிர் காலங்களில் இன்னும் அதிகமாக வரும். இவை சுவை, வாசனையை மாற்றிவிடும். ஒவ்வொன்றாக எடுப்பது கடினம். ஆனால் எளிய வழிகளால் பூச்சிகள் வருவதை தடுக்கலாம்.

வெயிலில் உலர்த்துதல்: பூச்சிகள் ஈரத்தில் வாழும். சுத்த துணியில் அரிசியைப் பரப்பி 2-3 மணி நேரம் வெயிலில் வைக்கவும். இப்படி செய்தால் ஈரம் நீங்கி பூச்சிகள் வராது.

   

பெருங்காயம், வினிகர்: கிண்ணத்தில் வெள்ளை வினிகர் ஊற்றி 1/4 ஸ்பூன் பெருங்காயம் சேர்க்கவும். அரிசி அருகே வைத்தால் அந்த வாசனை பூச்சிகளை விரட்டும். பின்னர் காற்று புகாத டப்பாவுக்கு மாற்றவும்.

   

உப்பு: ஈரத்தை உறிஞ்ச உப்பு தூவவும். பாத்திர மேல் அல்லது அடியில் உப்பு போடவும். அரிசி உலர்ந்து பூச்சிகள் வராது.

 

பிரியாணி இலை: வாசனை பூச்சிகளுக்கு பிடிக்காது. 2-3 இலைகள் டப்பாவில் போடவும்.

பூண்டு: தோல் நீக்காத 5-6 பற்கள் போடவும். வாசனை விரட்டும். அவ்வப்போது மாற்றவும். அரிசி பாதுகாப்பாக இருக்கும்.