அடுத்த பரபரப்பு… நெருங்கும் தேர்தல்…. மற்றொரு திமுக தலைவரின் பதவி பறிப்பு…!

By Nanthini on கார்த்திகை 10, 2025

Spread the love

கடந்த மாதம் அக்டோபர் 16-ம் தேதி, திமுக கவுன்சிலர்கள் 23 பேர் நகராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும், தலைவரின் செயல்பாடுகள் நகராட்சிக்கும், அரசுக்கும் எதிராக உள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்களை அடங்கிய மனுவை, நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமாரிடம் அளித்தனர்.

சங்கரன்கோவில் திட்டக்குடி வரிசையில் கிருஷ்ணகிரி நகராட்சியின் சேர்மனும் பதவியை இழந்துள்ளார். திமுகவை சேர்ந்த பரிதா நவாப்புக்கு எதிராக சொந்த கட்சியின் கவுன்சிலர்கள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. திமுகவின் பல இடங்களில் உட்கட்சி பூசல் நிலவுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேர்தல் நெருங்கும் சமயத்தில் அடுத்தடுத்த பதவி இழப்பு சம்பவங்கள் தலைமைக்கு பெரிய தலைவலியை கொடுத்துள்ளது.