“நான் கேட்டா உன்னால பணம் தர முடியாதா?”… தினம் தினம் பணத்துக்காக திட்டிய மனைவி… ஆத்திரத்தில் ஒரே போடாய் போட்ட கணவன்… காட்டுக்குள் நடந்த பயங்கர சம்பவம்…!

By Nanthini on கார்த்திகை 10, 2025

Spread the love

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வெள்ளக்கோவில் அருகே கணபதி பாளையம் அப்பையன் பகுதியை சேர்ந்த பெரியசாமி (77) மற்றும் புஷ்பாத்தாள்(65) தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களுடைய மூத்த மகனான பரமசிவன் என்பவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால் திருமணம் ஆகாமல் பெற்றோருடன் இருந்துள்ளார். இரண்டாவது மகனான முருகேசன் என்பவருக்கு அவருடைய உறவுக்கார பெண்ணுடன் திருமணம் நடந்த நிலையில் அவர் தன்னுடைய குடும்பத்துடன் தனியாக வசித்து வந்தார்.

இதனிடையே கூலி வேலை செய்து வந்த பெரியசாமி வயது மூப்பு காரணமாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து உள்ளார். இதனால் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து கோழி மற்றும் ஆடுகளை வளர்த்து விற்பனை செய்து அதில் வரும் வருமானத்தை வைத்து வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். ஆடு, மாடு மற்றும் கோழிகளை விற்பனை செய்யும் பணத்தை மனைவி கணவருக்கு கொடுக்காமல் தன்னிடமே வைத்துக் கொள்வாராம். எனவே பெரியசாமி தனக்கு ஏதாவது வேண்டுமென்றால் கூட தனது மனைவியிடம் பணம் வாங்கி தான் வாங்க வேண்டிய சூழல் இருந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பெரியசாமி பணத்தைக் கேட்கும் போது அவருடைய மனைவியை கொடுக்க மறுத்து அவரை தொடர்ந்து திட்டி வந்துள்ளார்.

   

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரம் அடைந்த கணவன் பெரியசாமி கட்டையால் மனைவியை சரமாரியாக அடித்து கொலை செய்துள்ளார். உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கணவன் பெரியசாமியை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.