மத்திய வருவாய் மற்றும் நிதி அமைச்சகத்தின் கஸ்டம்ஸ் அலுவலகம் கொச்சியில் 19 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சீனியர் ஸ்டோர் கீப்பர், டிரேட்ஸ்மேன், சீமன், கிரீசர் போன்ற பணிகள். 10ஆம் வகுப்பு தகுதியுடன் தொழில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கஸ்டம்ஸ் அலுவலகங்கள் சுங்க வரி மீறல்களைக் கண்காணிக்க முக்கியமானவை. விமான நிலையங்கள், துறைமுகங்களில் செயல்படுகின்றன. இந்தியாவின் முக்கிய நகரங்களில் அலுவலகங்கள் உள்ளன.
பணியிடங்கள்:
- டிரேட்ஸ்மேன் – 3
- சீமன் – 11
- கிரீசர் – 4
- சீனியர் ஸ்டோர் கீப்பர் – 1
தகுதி விவரம்:
டிரேட்ஸ்மேன்: மெக்கானிக்/டீசல்/ஃபிட்டர்/டர்னர்/வெல்டர்/எலக்ட்ரிஷியன் போன்ற ஐடிஐ பயிற்சி. பொறியியல்/ஆட்டோ/கப்பல் பழுதுபார்ப்பில் 2 ஆண்டு அனுபவம்.
சீமன்: 10ஆம் வகுப்பு + இயந்திர கப்பலில் 3 ஆண்டு அனுபவம், ஹெல்ம்ஸ்மேன்/சீமென்ஷிப் 2 ஆண்டுகள்.
வயது: 25 வரை (சீனியர் ஸ்டோர் கீப்பர் 30 வரை). ஸ்.சி/ஸ்.டி 5 ஆண்டு, ஓ.பி.சி 3 ஆண்டு, மாற்றுத்திறனாளி 10 ஆண்டு தளர்வு.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
சம்பள விவரம்:
- டிரேட்ஸ்மேன்: 19,900-63,200
- சீமன், கிரீசர்: 18,000-56,900
- சீனியர் ஸ்டோர் கீப்பர்: 29,200-92,300
விண்ணப்பிக்கும் முறை: தபால் வழியாக. கடைசி தேதி டிசம்பர் 15, 2025.
முகவரி: Additional Commissioner of Customs (Establishment.), Office of Commissioner of Customs (Preventive), 5th Floor, Catholic Centre, Broadway, Cochin-682031. மின்னஞ்சல்: estt.ccpcochin@gov.in.
கூடுதல் தகவலுக்கு https://cenexcisekochi.gov.in/. விண்ணப்பிக்கும் முன் அறிவிப்பை சரிபார்க்கலாம்.
