“தொட்டு தானே பார்த்தாங்க, ரேப்பா பண்ணிட்டாங்க…?” மாணவிகளிடம் எல்லை மீறிய டெக்னீசியன்கள்… கொந்தளித்த மாணவர்கள்…. திடீர் போராட்டத்தால் பரபரப்பு…!!

By Devi Ramu on கார்த்திகை 10, 2025

Spread the love

புதுச்சேரி கனகசெட்டிகுளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். செவிலியர் பிரிவு மாணவிகள் மருத்துவமனையில் பயிற்சி பெறச் செல்லும்போது எக்ஸ்ரே பிரிவில் பணியாற்றும் டெக்னீஷியன்கள் சரவணன் மற்றும் திவாகர் இருவரும் 10க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் தேவையற்ற இடங்களில் தொடுவது, அநாகரிகமாகப் பேசுவது போன்ற பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கல்லூரியின் உள் புகார் குழுவிடம் மாணவிகள் புகார் அளித்தனர். குழு 60 நாட்களில் விசாரணை நடத்தி ஆவணங்களை நிர்வாகத்திடம் ஒப்படைத்தது. ஆனால் நிர்வாகம் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நிர்வாகம் டெக்னீஷியன்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் தெரிகிறது. நிர்வாகத்தில் பணியாற்றும் ஜூலி அசோக் என்பவர் “தொட்டு மட்டும் தானே பார்த்தாங்க, ரேப்பா பண்ணிட்டாங்க?” எனக் கேட்டதாகக் கூறப்படுகிறது.

   

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் நிர்வாகத்துடன் பேச முயன்றபோது அழைப்பு விடுக்கப்பட்டது. பிரச்சனை வெளியே தெரியாமல் நிர்வாகம் பல மாதங்களாக மறைத்து வந்ததாக மாணவர்கள் கூறுகின்றனர். மாணவர்கள் கருத்து தெரிவிக்கக் கூடாது என விடுதியைக் காலி செய்யச் சொல்லி, விடுமுறை அளித்து பிரச்சனையைத் திசை திருப்பியதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரு டெக்னீஷியன்களை உடனடியாக பணி நீக்கம் செய்து வழக்குப் பதிவு செய்யக் கோரி 100க்கும் மேற்பட்ட செவிலியர், பிசியோதெரபி உள்ளிட்ட பிரிவு மாணவர்கள் கல்லூரி வளாக வாயிலில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.