எப்படி அடைக்கலாம்…? ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற மகன்கள்…! ஓய்வு பெற்ற தாசில்தாருக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு பின்னணி…!!

By Devi Ramu on கார்த்திகை 10, 2025

Spread the love

திருச்சி மாவட்டம் தாயனூர் மேல் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி ஓய்வு பெற்ற தாசில்தார். ஓய்வுக்குப் பின் குஞ்சாயி அம்மன் கோவில் நிலமான 8 ஏக்கரில் 2 ஏக்கரை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். மீதமுள்ள நிலத்தில் கோவில் மருளாளி அசோக்குமார் மற்றும் இன்பராஜ் விவசாயம் செய்தனர். இந்த நில பிரச்சினை தொடர்பாக சுப்பிரமணிக்கும் அசோக்குமாருக்கும் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு நடந்து வருகிறது.

நேற்று மாலை சுப்பிரமணி வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அசோக்குமார் நிலத்துக்கு தண்ணீர் செல்லும் வாய்க்காலில் கற்களை வைத்து அடைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை அறிந்த அசோக்குமாரின் மகன்கள் தமிழ்செல்வன் மற்றும் சூர்யா வந்து சுப்பிரமணியுடன் தகராறு செய்தனர். சுப்பிரமணி அசோக்குமார் மற்றும் அவரது மகன்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாகச் சொல்லப்படுகிறது.

   

ஆத்திரமடைந்த அசோக்குமார் மண்வெட்டியால் சுப்பிரமணியைத் தாக்கினார். தமிழ்செல்வன் மற்றும் சூர்யா கத்தி, அரிவாளால் சரமாரியாகத் தாக்கிவிட்டு தப்பினர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உயிரிழந்த சுப்பிரமணியின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

   

இதனையடுத்து தனிப்படை போலீசார் திருச்சி-தொகைமலை சாலையில் அசோக்குமார், தமிழ்செல்வன், சூர்யா ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஓய்வு பெற்ற தாசில்தார் நிலத் தகராறில் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.