தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. குறிப்பாக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் இந்த முறை அதிமுக ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார். அதேசமயம் அதிமுகவில் இபிஎஸ் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் நிர்வாகிகள் பலரும் கட்சியிலிருந்து தொடர்ந்து நீக்கப்பட்டு வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியிலும் இபிஎஸ் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் மாற்றுக் கட்சியில் இணைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி மதிமுக மாநில மாணவரணி துணைச் செயலாளர் சிவநாதன், இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லை சத்யா, மதிமுகவிலிருந்து வெளியேறிய நிலையில் தற்போது சிவநாதனும் வெளியேறியுள்ளார்.
