திடீர் திருப்பம்… 15 தொகுதி+ 1 ராஜ்ய சபா சீட்… பாமகவுடன் டீலிங்கை தொடங்கிய அதிமுக கூட்டணி…!

By Nanthini on கார்த்திகை 10, 2025

Spread the love

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் கட்சியின் விதிகளுக்கு புறம்பாக நடந்ததாக அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. இது தொடர்பாக அன்புமணி விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்த நிலையில் அன்புமணி பதிலளிக்காததால் அவரை கட் செய்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்திருந்தார். அன்புமணியை செயல் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாகவும் ராமதாஸ் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து கட்சியின் புதிய செயல் தலைவராக தன்னுடைய மூத்த மகள் காந்திமதியை சமீபத்தில் ராமதாஸ் நியமித்திருந்தார். மறுபக்கம் கட்சி அதிகாரம் அன்புமணிக்கு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்ததால் பாமகவில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் அன்புமணி மற்றும் ராமதாஸ் என்ற இரு தரப்பினருடன் பாஜக, அதிமுக கூட்டணி நூதனமான டீலிங் பேசி வருகிறதாம். அன்புமணி தரப்புடன் பாஜகவும் ராமதாஸ் தரப்புடன் ஆத்தூர் இளங்கோ மூலமாக இபிஎஸ்ஸும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளனர். அன்புமணி 15 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா கேட்கும் நிலையில் அதைவிட குறைவாக ராமதாஸ் ஒத்துக்கொள்ள மாட்டார் என்கின்றனர். அதேபோல எந்த அணி ராஜ்யசபா சீட்டை கைப்பற்றும் என்ற போட்டியும் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.