நள்ளிரவில் பாமக அலுவலகத்தில் குவிந்த போலீஸ்… உச்சகட்ட பதற்றம்… அடுத்த பரபரப்பு…!

By Nanthini on கார்த்திகை 10, 2025

Spread the love

சென்னை தி.நகரில் உள்ள பாமக அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதில் அந்த செய்தி வெறும் புரளி என தெரிய வந்தது.

அதேபோல மலேசியாவில் இருந்து சென்னை வந்திருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் அதுவும் வெறும் புரளி என தெரியவந்தது. கடந்த சில நாட்களாகவே குறிப்பாக சென்னையில் அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்களின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.