பல்கேரியாவை பிறப்பிடமாகக் கொண்ட பாபா வங்காவின் கணிப்பில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற விவரம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றது. இவர் தன்னுடைய யதார்த்தமான கணிப்புகளால் நடக்க இருப்பதை முன்கூட்டியே கூறி எதிர்கால சந்ததியினரை கவர்ந்துள்ளார். கண் தெரியாமல் வாழ்ந்த இவ்வாறு கடந்த 1996 ஆம் ஆண்டு இந்த உலகை விட்டு பிரிந்தாலும் தரிசனங்களால் உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அதன்படி இன்னும் ஒரு மாதத்தில் பிறக்கவிருக்கும் 2026 ஆம் ஆண்டில் வரவுள்ள ஆபத்துக்கள் குறித்து பாபா வங்கா கூறிய விஷயங்கள் என்ன என்பதை இதில் பார்க்கலாம்
தற்போது செயற்கை நுண்ணறிவின் தாக்கம் அதிகமாகி வரும் நிலையில் வர இருக்கும் 2026 ஆம் ஆண்டில் கடும் முன்னேற்றத்தை கொண்டிருக்கும். மனித கட்டுப்பாட்டை கடந்து நமது அன்றாட வாழ்க்கையையும் இது பாதிக்கும். இது பாபா வங்கா அவருடைய கணிப்பில் விளக்கமாக கூறியுள்ளார். அதன்படி ஏஐ தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி காண்பதால் அவருடைய கணிப்பில், AI நெறிமுறைகள், பாதுகாப்பு மற்றும் அனைத்து வேலைகளுக்கும் இயந்திரங்களின் பாவனை அதிகமாக மனிதர்களுக்கு வேலை இல்லாமல் செல்லும். இதனால் பஞ்சம் வருவதற்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் 2026 நவம்பர் மாதம் வேற்றுக்கிரக வாசிகளுடன் தொடர்புகள் வலுப்படுத்தப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் ஒரு பெரிய விண்கலம் பற்றியும் கணிப்பில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. மேலும் மனிதர்களிடையே ஆர்வத்தையும் பயத்தையும் தூண்டி வேற்று கிரகங்களில் இருந்து வரும் ஏலியன்கள் பூமிக்கு அப்பால் அறிவார்ந்த வாழ்க்கை மீதான ஆர்வத்தை தூண்டும் என்று பாபா வங்கா கணித்துள்ளார்.
