தமிழகத்தில் 12,753 ரேஷன் கடைகளில் இது இல்லை… திமுக அரசுக்கு ஷாக் கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி…!!

By Soundarya on கார்த்திகை 9, 2025

Spread the love

தினமும் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை தமிழக மக்களிடம் சேர்க்கும் பணியில் கூட திமுக அரசு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “திமுக ஆட்சியில் மற்ற துறைகளை காட்டிலும், நுகர்பொருள் வாணிப கழகம் துறையானது ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது.

இதுவரை மத்திய அரசு 8,722 டன் கோதுமையை ஒதுக்கீடு செய்தும், தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை விநியோகிக்கப்படவில்லை என்று செய்திகள் வருகிறது” என்று  குறிப்பிட்டுள்ளார்.