“தொட்டு தொட்டு பேசுகிறார், ஆபாச வீடியோ காட்டுகிறார்” எங்களுக்கு பாதுகாப்பு இல்லை… கமிஷனர் அலுவலகத்தில் வந்து கதறிய பள்ளி மாணவிகள்..!!

By Soundarya on கார்த்திகை 8, 2025

Spread the love

மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பிரபல அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவிகள் சில பெற்றோரோடு வந்து கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்கள். அதில் நாங்கள் படித்து வரும் பள்ளியில் மாணவிகளுக்கு பல கொடுமைகள் நடக்கிறது .குறிப்பாக எங்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர் ஜெயராம் என்பவர் மாணவிகளை தொட்டு தொட்டு பேசுகிறார். மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை. ஆபாச வீடியோக்களை எங்களிடம் காண்பித்து பாலியல் தொந்தரவு செய்கிறார். தனியாக வரவழைத்து பாலியல் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

அவருடைய செயல்பாடுகள் குறித்து தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தோம். அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வகுப்பறையில் இருந்த கேமராவை  வேறு ஒரு பகுதியில் மாற்றி வைத்து விட்டார்கள். எனவே பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர் மீதும் அவருக்கு உடந்தையாக இருக்கும் தலைமை ஆசிரியை, உதவி தலைமை ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்கள். இதனை எடுத்து காவல் துறையினர் தலைமை ஆசிரியை, ஆசிரியர் ஜெயராம், உதவி தலைமை ஆசிரியை ஆகிய மூன்று பேர் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.