கரூரில் விஜய் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்தனர். இதற்கு விஜய்தான் முழு காரணம் என்று பலரும் கூறினர். ஆனால் போட்டியாளராகக் கருதப்படும் அஜித், விஜய் மட்டும் காரணமல்ல, அனைவருமே காரணம் என்று தெரிவித்தார். தனது பேட்டி தவறாகப் பயன்படுத்தப்படுவதை அறிந்த அஜித் நேற்று விளக்கம் அளித்தார். அதில், இளைஞர்களுக்கு நல்ல செய்தி தர வேண்டிய இடத்தில் சிலர் தங்கள் அஜெண்டாவுக்கு ஏற்ப என் பேட்டியைப் பயன்படுத்துகின்றனர். எல்லாவற்றையும் பரபரப்பாக்க முயல்வார்கள் எனத் தெரியும். ஆனால் நான் நேர்மறையான பாதையில் செல்ல விரும்புகிறேன்.
எப்போதும் விஜய்க்கு எதிரானவன் இல்லை. அவருக்கு நல்லதே நினைத்திருக்கிறேன். இதை நச்சு கலந்த சம்பவமாக மாற்றிவிட்டோம். என் ஆங்கில பேட்டி இன்னும் பத்து இருபது ஆண்டுகளில் பெரிய பேசுபொருளாக இருக்கும். உங்களையும் உங்கள் குடும்பத்தையும் முதலில் பாருங்கள். தகுதியானதாகத் தோன்றினால் என் படங்களைப் பாருங்கள். படம் பார்க்க வேண்டும் என்று கூறமாட்டேன். ஓட்டு கேட்க வரமாட்டேன் என்று கூறினார். எப்போதும் மோதி கொள்ளும் அஜித் விஜய் ரசிகர்கள் இடையே அஜித்தின் பேச்சு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் ரசிகர்கள், அஜித்தை வைத்து அரசியல் செய்ய நினைத்தவர்களை வாயடைக்கச் செய்துவிட்டார். அஜித்-விஜய் நட்பு பொதுவெளியில் தெரிந்ததால் இனி யாராலும் பிளவு ஏற்படுத்த முடியாது என்று சோஷியல் மீடியாவில் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் அஜித்துக்கு ஒன்று என்றால் விஜய் ரசிகர்கள் துணை நிற்போம், எங்களுக்கு ஒன்று என்றால் அஜித் ரசிகர்கள் நிற்பார்கள் என்பதை அரசியல் செய்ய நினைப்பவர்கள் பார்த்து பயப்படுவார்கள் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
