திமுகவில் இப்படி ஒரு பிரச்சனையா?… ஸ்டாலின் கைக்கு சென்ற ரிப்போர்ட்… செம டென்ஷனில் பறந்த உத்தரவு…!

By Nanthini on கார்த்திகை 7, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளது. இதனால் திமுக பல வியூகங்களை வகுத்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதற்காக ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்று கட்சிணறை தங்கள் கட்சியில் இணைத்து வருகிறது. அதே சமயம் கூட்டணி தொடர்பாகவும் பல வியூகங்களை வகுத்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தனது கட்சியில் இருக்கும் விவகாரங்களை களைந்து கட்சியை மேலும் பலப்படுத்தும் முயற்சியில் முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக களமிறங்கியுள்ளார்.

இதனிடையே நெல்லை திமுகவில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கவுன்சிலர்கள் எதிர்ப்பு காரணமாக மேயர் மாற்றப்பட்டது, பொறுப்பு அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு மாற்றப்பட்டது என அடுத்தடுத்த சம்பவங்கள் இதற்கு சாட்சி என்கின்றனர். இந்நிலையில் உள்கட்சியை பூசலால் தேர்தல் பணிகளில் தோய்வு ஏற்பட்டு இருப்பதாக தலைமைக்கு ரிப்போர்ட் போனதால் நெல்லையில் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறாவிட்டால் பதவி பறிக்கப்படும் என ஸ்டாலின் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தார். ஸ்டாலினின் திடீர் கோபத்திற்கு உட்கட்சி விவகாரம் தான் காரணம் எனக் கூறப்படுகிறது.