திடீர் திருப்பம்… அதிமுக கூட்டணியில் 15 சீட், ஒரு ராஜ்ய சபா சீட்… பரபரப்பை கிளப்பிவிட்ட வைகோ…!

By Nanthini on கார்த்திகை 7, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் அனைத்து கட்சிகளும் மாறி மாறி மாற்றுக் கட்சியினரை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, 2011 சட்டமன்ற தேர்தல் சமயத்தில் ஓபிஎஸ், செங்கோட்டையன், ஜெயக்குமார் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வந்தனர். 2011 சட்டமன்ற தேர்தலில் மதிமுகவிற்கு 12 தொகுதிகள் தான் என ஜெயலலிதா கூறியதாக ஓபிஎஸ் தெரிவித்தார். 2006 தேர்தலில் அதிமுக கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு இருந்தது மதிமுக. 2006 ஆம் ஆண்டில் 35 இடங்களில் போட்டியிட்ட மதிமுகவுக்கு 2011 ஆம் ஆண்டில் 12 தொகுதிகள் என்பதை ஏற்க முடியாது என்று கூறினேன்.

இதனைத் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் 12 தொகுதிகள் கேட்டபோது வைகோவுக்கு கூட்டணியில் இணைய விருப்பமில்லை என ஓபிஎஸ் ஜெயலலிதாவிடம் பொய் சொல்லிவிட்டார். ஜெயலலிதாவிடம் அவர் கூறிய தகவல்கள் அனைத்தும் தவறானது. 2011 இல் செய்த தவறுக்காக இப்போது ஓபிஎஸ் அனுபவிக்கிறார். 15 தொகுதி தர ஜெயலலிதா முன்வந்த போது 12 சீட்டை தர முடியும் என ஓபிஎஸ் கூறினார். ஜெயலலிதா 15 தொகுதி மற்றும் ஒரு ராஜ்ய சபாத் சீட் தர தயாராக இருந்தது பிறகு தான் எனக்கு தெரியும். இது அனைத்திலும் சதி வேலை செய்தது ஓபிஎஸ் தான் என வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.