தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே மதுரையில் இன்றைய செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்பி உதயகுமார், தமிழக வெற்றி கழகம் கூட்டணி குறித்த கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்க மறுத்தார். அதிமுக சட்டபூர்வமான பிரதான எதிர்க்கட்சி என்று குறிப்பிட்ட அவர், கடந்த 2021 தேர்தலில் ஆட்சி மாற்றம் என்பது வெறும் ஒரு லட்சத்து 92 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டும்தான் நடந்தது.
இந்த சிறிய வாக்கு பற்றாக்குறை கூட்டணிக்கு கிடைத்திருந்தால் உள்குத்து, வெளிக்குத்து, ஊமைக்குத்து இல்லாமல் இருந்திருந்தால் அதிமுக வெற்றி பெற்றிருக்கும். அதன் பொருள் வாங்கியவர்களுக்கு மட்டுமே தெரியும் என்று கூட்டணிக்குள் நடந்த துரோக செயல்கள் பற்றி மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளார். கூட்டணி தொடர்பாக பேசுவதற்கு இது நேரம் கிடையாது என்றும் தற்போது மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். கூட்டணி குறித்த முடிவுகளை பற்றி பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்கு பிறகு கேட்க வேண்டும் என கூறிய அவர், யார் பேச வேண்டுமோ அவர்கள் பேசினால் தான் அனைத்தும் நடக்கும் என்று தமிழக வெற்றி கழகம் கூட்டணி குறித்து மறைமுகமாக பேசியுள்ளார்
